காவிரியும் கருப்பு உடையும்: ரஜினி இதை செய்வாரா?

  • IndiaGlitz, [Monday,April 09 2018]

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீவிரமான போராட்டத்தை திசை திருப்பும் வகையில் உள்ள ஐபிஎல் போட்டியை நடத்த கூடாது என்றும் மீறி நடத்தினால் வீரர்களை கடத்துவோம் என்றும் ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். மேலும் இன்றும் ஒருசில அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும்  சென்னையில் நாளை நடக்கக்கூடிய ஐபிஎல் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், காவிரிக்காக தமிழகமே ஒன்றிணைந்து போராடி வரும் நிலையில் ஐபிஎல் போட்டியை நிறுத்துவது குறித்து ஐபிஎல் நிர்வாகிகள் யோசிக்கலாம். அப்படி ஒருவேளை நடத்தினாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடினால் காவிரி பிரச்சனை இந்தியா முழுவதும் செல்ல ஒரு வாய்ப்பு இருக்கின்றது. இதற்கு ஐபிஎல் நிர்வாகிகளும் வீரர்களும் ஒத்துழைக்க வேண்டும். இதுவும் இல்லையென்றால் போட்டியை பார்க்க செல்லும்  இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கருப்பு உடை அணிந்து போகலாம்' என்று யோசனை கூறியுள்ளார். ரஜினியின் இந்த கருத்தை நெட்டிசன்கள் உள்பட பலர் பாராட்டியுள்ளனர்.

இந்த நிலையில் கருப்பு உடை அணிந்து போட்டியை பார்க்க செல்லலாம் என்ற யோசனையை கூறிய ரஜினிகாந்தே கருப்பு உடை அணிந்து நாளை போட்டி நடக்கும் மைதானத்திற்கு வந்தால் உலகம் முழுவதற்கும் இந்த காவிரி பிரச்சனை சென்றடையும் என்று நெட்டிசன்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். கருப்பு உடையணிந்து மைதானத்திற்குள் ரஜினி சென்றால் அனைத்து கேமிராக்களும் பந்தை நோக்கி திரும்புவதை விட ரஜினியை நோக்கியே அதிகம் திரும்பும். அப்போது அவர் கருப்பு உடையில் இருப்பதையும், அவர் கையில் காவிரி குறித்த பதாகையும் இருந்தால் அதைவிட பெரிய காவிரி போராட்டம் தேவையில்லை என்பதே பலரது கருத்தாக உள்ளது. காவிரி போராட்டத்தை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நல்ல வாய்ப்பை பயன்படுத்த நாளை சென்னை மைதானத்திற்கு ரஜினி கருப்பு உடையுடன் செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

காமன்வெல்த் மைதானத்தில் வீராங்கனைக்கு காதல் புரபோஸ் செய்த வீரர்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை பெற்று வரும் நிலையில் மைதானத்தில் ஒரு ஜோடிக்கும் கிட்டத்தட்ட நிச்சயம்தார்த்தமே ஆகிவிட்டது.

சென்னையில் மனைவியை கொலை செய்துவிட்டு கோவில் குருக்கள் ஆடிய நாடகம்

சென்னை வடபழனி சிவன் கோவிலில் அர்ச்சகராக பணிபுரியும் குருக்கள் ஒருவர் தனது மனைவியை நண்பருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழிசை என்னை பார்த்து பயப்பட வேண்டாம்: சத்யராஜ் பதிலடி

நடிகர் சங்கம் சார்பில் நடந்த அறப்போராட்டத்தின் இறுதியில் நடிகர் சத்யராஜ் ஆவேசமாக பேசினார். அதில் குறிப்பாக ராணுவமே வந்தாமல் பயப்பட மாட்டோம், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு தமிழராக குரல் கொடுப்போம்

40 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் நினைத்திருந்தால்? ரஜினியை சீண்டிய தமிழிசை

'40 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள், கர்நாடகாவை சேர்ந்தவரை நடிகராக ஏற்க மாட்டோம் என நினைந்திருந்தால் நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க முடியுமா?

காவிரி பிரச்சனை குறித்து சிம்புவின் ஆவேச பேட்டி

காவிரி மேலாண்மை அமைப்பதற்குநடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் சிம்பு கலந்து கொள்ளவில்லை. இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் சிம்பு செய்தியாளர்களை சந்தித்தார்.