ரஜினிகாந்த் தோல்வி அடைவார்: சுப்பிரமணியன் சுவாமியின் கடுமையான விமர்சனம்
- IndiaGlitz, [Tuesday,May 16 2017]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்றைய ரசிகர்களின் சந்திப்பின்போது, 'கடவுள் இப்போது என்னை நடிகனாக பயன்படுத்தி வருகிறார். நாளை அவர் என்னை அரசியல்வாதியாக பயன்படுத்தினால் உண்மையாக செயல்படுவேன்' என்று தெரிவித்திருந்தார். இந்த பேச்சு அவர் அரசியலுக்கு வருவதை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்துவருமனான சுப்பிரமணியன் சுவாமி, ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நேற்று ஒரு ஆங்கில தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து கூறியதாவது:
”ரஜினிக்கென ஒரு கொள்கையே கிடையாது. அவர் தமிழரே கிடையாது. அவர் கர்நாடகாவில் பிறந்த மராத்திய பின்புலத்தை சார்ந்தவர். தற்போது அவருடைய அரசியல் பார்வையில் ஒரு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அரசியல் குறித்த கருத்தையெல்லாம் பற்றி பேசி வருகிறார். ஆனால் அவர் அரசியலுக்கு வந்தால், கண்டிப்பாக தோல்வியடைவார்.” என்று கூறியுள்ளார். சுவாமியின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கடுமையான கண்டங்ன்களை பதிவு செய்து வருகின்றனர்.