ரஜினியை தேச துரோக சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: சரத்குமார் ஆவேசம்

  • IndiaGlitz, [Thursday,May 31 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு பண உதவியும் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது 'ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் கலவரம் ஏற்பட்டதாகவும், அந்த சமூக விரோதிகளை இனம்கண்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்

மேலும் சென்னை திரும்பியவுடன் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, 'எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்று இருந்தால் தமிழகமே சுடுகாடாகிவிடும் என்றும் அவர் கோபமாக தெரிவித்தார்.

இந்த நிலையில் ரஜினியின் இந்த கருத்து குறித்து விமர்சனம் செய்த நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், 'மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய, நடிகர் ரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் போராடும் குணம் இல்லாமால் ஒரு மனிதன் எப்படி வாழமுடியும் என்றும் கூறினார்.

மேலும் சமூக விரோதிகள் யார் என்பது தெரியும் என்று கூறிய ரஜினிகாந்த் உடனே அந்த பட்டியலை ஒரு நபர் ஆணையம் முன்பு ரஜினி கொடுக்க வேண்டும். இல்லையெனில் ரஜினியை தேசத்துரோக குற்றச்சாட்டில் கைதுசெய்ய வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

More News

அடல்ட் காமெடி பட இயக்குனரின் முதல் 'யூ' படம்

'ஹரஹர மகாதேவகி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு 'ஏ' சான்றிதழ் அடல்ட் காமெடி படங்களை இயக்கி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார்.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய நடிகை

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியின் அடுத்த பாகம் அடுத்த மாதம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகவுள்ளது

தமிழ்நாடு சுடுகாடாகும்: பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் ஆவேசம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தூத்துகுடிக்கு சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில் அதன்பின்னர் பேட்டியளித்தார்.

'காலா'வுக்கு எதிராக போராட்டம்: டெபாசிட் இழந்த வாட்டாள் நாகராஜ் மிரட்டல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஜூன்  7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு கர்நாடக மாநில திரைப்பட வர்த்தக சங்கம் தடை விதித்துள்ளது.

இந்திய அளவில் ட்ரெண்டாகி வரும் #நான்தான்பாரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை