close
Choose your channels

கடைசி விவசாயிக்கு கை கொடுக்கின்றாரா ரஜினிகாந்த்?

Saturday, December 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'காக்கா முட்டை' என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய இயக்குனர் மணிகண்டன், இரண்டாவதாக இயக்கிய 'ஆண்டவன் கட்டளை' படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் அவர் இயக்கிய இன்னொரு படமான 'கடைசி விவசாயி', திரைப்படம் விவசாயிகளின் போராட்டம் போலவே யாராலும் கண்டுகொள்ளப்படாமல் முடங்கியுள்ளது

இந்த படத்தின் கதை குறித்து கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஒரு நல்ல கதையம்சம் உள்ள படம் முடங்கியிருக்க கூடாது என்ற எண்ணத்தில் அந்த படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். ரஜினியின் கால்ஷீட் கிடைக்க வருடக்கணக்கில் தவமிருப்பவர்கல் மத்தியில் தானாகவே முன்வந்து நடித்து கொடுப்பதாக ரஜினி கூறியதால் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிப்போன இயக்குனர் மணிகண்டன், உடனடியாக அந்த படத்தில் ரஜினிக்கு ஏற்ற ஒரு கேரக்டரை உருவாக்கி வருகிறாராம்.

ரஜினியின் அரசியல் எண்ட்ரிக்கு இந்த படம் பெரிதும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, ரிலீஸ் ஆக முடியாமல் முடங்கி போன படத்திற்கு புத்துயிர் கிடைத்துள்ளது என்பதால் இரண்டு பக்கமும் உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. விரைவில் இந்த படத்தில் ரஜினி நடிப்பது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment