கமல்ஹாசன் வீட்டிற்கு திடீரென விசிட் செய்த லதா ரஜினிகாந்த்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் நேற்று கமலஹாசன் வீட்டில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.
கமல்ஹாசனின் சகோதரரும் தேசிய விருது பெற்ற நடிகருமான சாருஹாசனுக்கு நேற்று 90 ஆவது பிறந்தநாள் என்பதால் இந்த பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கமலஹாசனின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கொண்டாடப்பட்ட இந்த விழாவில் ஸ்ருதிஹாசன், சுஹாசினி உள்பட கமல்ஹாசனின் ஒட்டுமொத்த குடும்பத்தினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ரஜினிகாந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் ’தலைவர் 168’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த் இருப்பதால் அவரால் இந்த விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும் அவரது சார்பாக லதா ரஜினிகாந்த் இந்த விழாவில் கலந்து கொண்டார். கமலஹாசன் குடும்பத்தினருடன் லதா ரஜினிகாந்த் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழா குறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘எங்கள் அனைவருக்கும் அண்ணனாகவும், வழிகாட்டியாகவும், தந்தையாகவும், இன்று வரை புரட்சிக்காரனாகவே வாழ்ந்துவரும் எங்கள் மூத்த அண்ணன் சாருவிற்கு இன்று 90 வயது. வாழ்த்துக்களுடனும் வணக்கங்களுடனும் உங்கள் நான்’ என்று கூறியுள்ளார்.
எங்கள் அனைவருக்கும் அண்ணனாகவும், வழிகாட்டியாகவும், தந்தையாகவும், இன்று வரை புரட்சிக்காரனாகவே வாழ்ந்துவரும் எங்கள் மூத்த அண்ணன் சாருவிற்கு இன்று 90 வயது. வாழ்த்துக்களுடனும் வணக்கங்களுடனும் உங்கள் நான். pic.twitter.com/In4sNFVu3K
— Kamal Haasan (@ikamalhaasan) January 5, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout