மேயாத மானுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டு

  • IndiaGlitz, [Wednesday,October 25 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' சுனாமியில் தப்பித்த ஒரே படம் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியான 'மேயாத மான்'. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து சென்னை உள்பட பெருநகரங்களில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் மற்றும் திரையுலக பிரமுகர்களின் பாராட்டுக்களை பெற்ற இந்த படத்தை நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து, 'நல்ல பொழுதுபோக்கு காமெடி படம்' என்று படக்குழுவினர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

ரஜினியின் பாராட்டுக்கு இந்த படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். வைபவ், பிரியா பவானிசங்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரத்னகுமார் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

கமல்ஹாசன் மீதான நிலவேம்பு சர்ச்சை: மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் டெங்கு காயச்சல் படுவேகமாக பரவி உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டெங்குவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

'மெர்சலுக்க்கு தமிழக அரசும் ஆதரவு! தனிமைப்படுத்தப்பட்டதா பாஜக?

விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர்கள் கூறிய கருத்தால் இந்த படம் தேசிய அளவிலும் பரபரப்புடன் விவாதம் செய்யப்பட்டது.

கவுண்டமணி காமெடியில் குத்து பாட்டு பாடிய டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர் அவ்வப்போது பாடல்கள் பாடி வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் நாகேந்திரபிரசாத நெகட்டிவ் ஹீரோவாக நடித்து வரும் 'கூத்தன்' என்ற படத்திற்காக சமீபத்தில் ஒரு குத்து பாடலை அவர் பாடியுள்ளார்.

தேசியகீதம் குறித்து நடிகை கவுதமியின் கருத்து

திரையரங்குகளில் தேசிய கீதம் ஒளிபரப்புவது கட்டாயம் என்பது தேவையா? தேசிய கீதம் ஒளிபரப்பும்போது எழுந்து நிற்க வேண்டியது அவசியமா? என்று நீதிமன்றம் முதல் பல இடங்களில் விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது.

சிங்கப்பூரை போல இந்தியாவிலும் பின்பற்றலாம்: கமல்ஹாசன்

ஒவ்வொரு நாளும் நள்ளிரவு நேரத்தில் சிங்கப்பூரில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. நமது நாட்டின் டிடி தொலைக்காட்சியிலும் அதேபோல் செய்யலாம்.