வாக்கிங் செல்லும் தலைவர்: வைரலாகும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் என்ன செய்தாலும் அது வைரல் ஆகி விடும் என்பதை கடந்த பல வருடங்களாக நாம் பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட சாத்தான்குளம் சம்பவம் குறித்து ’சத்தியமா விடவே கூடாது’ என்று ரஜினி கூறியது குறித்த ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்ட் ஆனது
அதேபோல் நேற்று முன் தினம் ரஜினிகாந்த் தனது லம்போர்கினி காரை ஓட்டிய புகைப்படமும் அதன் பின்னர் அவர் தனது மகள் சவுந்தர்யாவின் குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படமும் வைரல் ஆனது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது தனது குடும்பத்தினருடன் கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் இருக்கும் ரஜினிகாந்த் வாக்கிங் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வெறும் ஒன்பது வினாடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோவை ரஜினியின் ரசிகர்கள் அதிக அளவு பகிர்ந்து வருவதால் சமூக வலைதளங்களின் டிரெண்ட்கிங்கில் இடம்பெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
லம்போகினி கார் ஓட்டிய புகைப்படம், சவுந்தர்யா குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஆகியவற்றை அடுத்து தலைவரின் வாக்கிங் வீடியோவும் சமூக வலைதளங்களில் டிரென்ட் ஆகியுள்ளது ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சென்னையில் உள்ள கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் இன்று மாலை தலைவர் வாக்கிங் @rajinikanth @rmmoffice @SudhakarVM @RIAZtheboss pic.twitter.com/lmnFHkcQmA
— GINGEE RAJINI SENTHIL (@GingeeRajini) July 21, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com