close
Choose your channels

மாலத்தீவு கடற்கரையில் ரஜினிகாந்த் வாக்கிங்.. வைரல் புகைப்படம்..!

Tuesday, July 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் மாலத்தீவு சென்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இது குறித்த தகவலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் மாலத்தீவு சென்றுள்ள ரஜினிகாந்த் அங்குள்ள கடற்கரையில் வாக்கிங் செல்லும் காட்சியின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மாலத்தீவில் அவர் சாதாரண உடை அணிந்து எந்தவிதமான மேக்கப்பும் இன்றி காலில் செருப்பு கூட இல்லாமல் வாக்கிங் செல்லும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

திரையுலகில் அவர் சூப்பர் ஸ்டார் ஆக இருந்தாலும் அவர் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்றும் திரைக்குப் பின்னால் அவர் நடிப்பதில்லை என்றும் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதேபோல் அவர் நடித்த மற்றொரு திரைப்படமான ’லால் சலாம்’ படத்தின் அவருடைய காட்சியின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் இந்த படமும் இந்த ஆண்டுக்குள் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment