தனுஷ் மற்றும் சவுந்தர்யாவுக்கு ரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி

  • IndiaGlitz, [Saturday,April 01 2017]

தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் கடந்த சில மாதங்களாக 'விஐபி 2' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
இன்றைய கடைசி தின படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் ஆசியை வழங்கினர். இதுகுறித்து தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'தலைவர் அவர்களின் ஆசியுடன் இன்றுடன் 'விஐபி 2' படப்பிடிப்பு முடிவடைந்தது. அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் தனுஷ், அமலாபால், கஜோல், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைத்துள்ளார்.

More News

தெலுங்கு படத்தில் வில்லனாகும் பிரபல தமிழ் ஹீரோ

பாலிவுட் நாயகர்கள் அக்சயகுமார், விவேக் ஓபராய் ஆகியோர்கள் தமிழ் படங்களில் வில்லனாக நடித்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் ஹீரோ ஒருவர் தெலுங்கு படம் ஒன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தளபதி 61: அசர வைக்கும் லொகேஷனில் அடுத்தகட்ட படப்பிடிப்பு

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இரண்டு கட்டமாக முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது

மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ். தோனி தலைமை ஏற்பது உறுதி. சீனிவாசன் நம்பிக்கை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தடை அடுத்த வருடம் முடியவுள்ள நிலையில் அந்த அணியை வாங்க முடிவு செய்துள்ளதாக முன்னாள் பிசிசிஐ தலைவர் மற்றும் ஐசிசி சேர்மன் சீனிவாசன் தெரிவித்துள்ளார்

ஜி.வி.பிரகாஷின் 'குப்பத்து ராஜா'வில் நாயகியாகும் பிரபல நடிகை

பிரபல ஒளிப்பதிவாளர் பாபா பாஸ்கர் இயக்கும் முதல் படமான 'குப்பத்து ராஜா' என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ளார் என்ற செய்தியை சமீபத்தில் பார்த்தோம்

சி.ஆர்.சரஸ்வதி மீது அழுகிய தக்காளி வீச்சு. ஆர்.கே.நகர் மக்கள் ஆத்திரம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தபோது அக்கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த சி.ஆர்.சரஸ்வதி 'அம்மா இட்லி சாப்பிட்டார், நலமாக இருக்கின்றார்.