முதல்வரின் உடல்நிலையை விசாரிக்க அப்பல்லோ சென்ற ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Monday,October 17 2016]

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் தேதியில் இருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று தமிழக மக்களும், அமைச்சர்களும் பல்வேறு பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.
முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரிக்க டெல்லி தலைவர்கள் உள்பட பல்வேறு தலைவர்கள் தினந்தோறும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா மீது மிகுந்த பாசமும் மரியாதையும் வைத்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று மாலை தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அப்பல்லோ வந்து மருத்துவர்களிடம் முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
சுமார் 25 நிமிடங்கள் வரை மருத்துவமனையில் இருந்த ரஜினிகாந்த் பின்னர் மகளுடன் திரும்பியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' நாயகி அறிவிப்பு

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் சிம்பு நாயகி

2016ஆம் ஆண்டின் வெற்றி நாயகன் விஜய்சேதுபதி நடித்த ஆறு படங்கள் இதுவரை வெளிவந்து வெற்றி பெற்றுள்ளது.

விஷாலின் 'கத்திச்சண்டை' ரிலீஸ் தேதி

விஷால் நடித்து வந்த ஆக்சன் படமான 'கத்திச்சண்டை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சுசீந்திரனின் சூப்பர் ஹிட் வெற்றி படத்தின் 2ஆம் பாகத்தில் விக்ராந்த்

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய முதல்படமான 'வெண்ணிலா கபடிக்குழு' கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.

செல்வராகவனின் அடுத்த படத்தில் தமிழில் அறிமுகமாகும் பிரபல நடிகை

சூப்பர் ஹிட் வெற்றி படமான 'பிரேமம்' படத்தில் மலர் டீச்சர் கேரக்டரில் நடித்த நடிகை சாய்பல்லவி, அந்த ஒரே ஒரு படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.