திடீரென மும்பை கிளம்பி சென்ற ரஜினிகாந்த்.. படப்பிடிப்பும் இல்லையாம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பை சென்ற நிலையில் அங்கு ’தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது என்பதை பார்த்தோம். குறிப்பாக அமிதாப் பச்சன் உடன் ரஜினிகாந்த் நடித்த காட்சிகளின் படப்பிடிப்பு நடந்தது.
இந்நிலையில் தலைவர் 170’ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று திடீரென ரஜினிகாந்த் மீண்டும் மும்பை கிளம்பி சென்றார். அவர் காரில் இருந்து இறங்கி விமான நிலையத்தை நோக்கி செல்லும்போது ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்கள் மும்பைக்கு படப்பிடிப்புக்காக செல்கிறீர்களா? என்று கேட்டபோது ’இல்லை, கிரிக்கெட் மேட்ச் பார்க்க போகிறேன்’ என்று கூறினார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இன்று உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள நிலையில் அந்த போட்டியை பார்க்கத்தான் ரஜினிகாந்த் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, ரஜினிகாந்த் அவர்களுக்கு கோல்டன் பாஸ் வழங்கியிருந்தார் என்பது தெரிந்ததே.
Superstar #Rajinikanth is off to Mumbai to watch the #semifinals between India and New Zealand tomorrow. #INDvsNZ
— Manobala Vijayabalan (@ManobalaV) November 14, 2023
Superstar is one of the few celebrities… pic.twitter.com/z2wUdoFu0s
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com