காவேரி மருத்துவமனைக்கு ரஜினிகாந்த் வரும் நேரம்

  • IndiaGlitz, [Tuesday,July 31 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்றுடன் டேராடூனில் முடிவடைந்ததை அடுத்து இன்று ரஜினிகாந்த் சென்னை திரும்பவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

அந்த வகையில் இன்று இரவு ரஜினிகாந்த் சென்னை திரும்பவுள்ளதாகவும், அதனையடுத்து அவர் உடனே தனது நீண்ட கால நண்பர் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு செல்லவுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.

இப்போது வெளிவந்துள்ள தகவலின்படி இன்று இரவு 9 மணிக்கு ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சற்றுமுன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை நேரில் சந்தித்தார். ரஜினிக்கும் கருணாநிதியை சந்திக்க அனுமதி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்