முறுக்கு மீசையுடன் உலகப்புகழ் பெற்ற இடத்திற்கு சென்ற ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Wednesday,October 10 2018]

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு தற்போது உபி மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சில நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் உபி மாநிலம் சென்றார்.

இந்த நிலையில் படப்பிடிப்பின் இடையே ரஜினிகாந்த் உலகப்புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். ரஜினிகாந்த், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வந்ததை அறிந்த அந்த பகுதி மக்களும் சுற்றுலா பயணிகளும் அவரை பார்க்க முண்டியடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முறுக்கு மீசை தோற்றத்துடன் கோவிலுக்கு வந்த ரஜினியை பலர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்த செய்தியை வட இந்திய செய்தி சேனல்களும் ஒளிபரப்பின என்பது குறிப்பிடத்தக்கது