பாபாஜி குகைக்கு மலையேறி செல்லும் ரஜினிகாந்த்.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Monday,August 28 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் இமயமலைக்கு ஆன்மிக பயணம் சென்றார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியது என்பது தெரிந்தது.

மேலும் இமயமலை பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பும் வழியில் அவர் ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று சில அரசியல்வாதிகளையும் சந்தித்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் இமயமலையில் பாபாஜி குகைக்கு செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் அவர் தனது நண்பர்களுடன் ஒரு கையில் கம்பை ஊன்றி கொண்டு இன்னொரு கையில் பாதுகாப்பு அதிகாரியின் கையை பிடித்துக் கொண்டு மலையேறும் காட்சிகள் உள்ளன.

மேலும் பாபாஜி குகையில் ரஜினிகாந்த் தியானம் செய்வது, அங்குள்ள புகைப்படங்களை பார்வையிடுவது உள்ளிட்ட காட்சிகளும் இந்த வீடியோவில் உள்ளது. 70 வயதில் ரஜினிகாந்த் மலை ஏறி ஆன்மீகப் பயணம் செய்யும் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து, கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ள நிலையில் அவர் நடிக்க இருக்கும் ’தலைவர் 170’ திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. 'ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகயிருக்கும் ’தலைவர் 170’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ’லால் சலாம்’ என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் இன்னும் ஒரு சில மாதங்களில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.