ராமர் கோவில் திறப்பு விழா.. அயோத்தி புறப்பட்டார் ரஜினிகாந்த்.. வேறு யாரெல்லாம் செல்கிறார்கள்?

  • IndiaGlitz, [Sunday,January 21 2024]

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், அதில் கலந்து கொள்ள பல திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பிதழ் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று அயோத்திக்கு புறப்பட்டு சென்றார். அவர் சென்னை விமான நிலையம் செல்லும் வழியில் செய்தியாளர்களை சந்தித்தபோது ’ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு செல்வதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார்,

ரஜினிகாந்த் மட்டுமின்றி பல திரையுலக பிரபலங்களுக்கு ராமர் கோயில் விழாவில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், அக்ஷய்குமார், அஜய் தேவ்தான், அனுபம் கேர், சன்னி தியோல் மற்றும் கங்கனா ரனாவத் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தென்னிந்திய பிரபலங்களான மோகன்லால், ரிஷப் ஷெட்டி, ராம்சரண் தேஜா, பிரபாஸ், அல்லு அர்ஜுன் போன்றவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் நடிகர்களான ரஜினிகாந்த், தனுஷ் காமெடி நடிகர் தனுஷ் ஆகியோர்களுக்கும் பாடகர் உன்னிகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களுக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அனைவரும் தவறாமல் நாளை நடைபெற உள்ள ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'SK21' படத்தின் டீசரை பார்த்த ரஜினி, விஜய் பட இயக்குனர்.. என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் ஆகியோர்களின் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'SK21' படத்தின் டீசரை பார்த்து தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழக கிரிக்கெட் அணியில் இடம்.. மகனை நினைத்து பெருமைப்படும் தமிழ் நடிகர்..!

தமிழ் நடிகர் ஒருவர் தனது மகனுக்கு U-14 தமிழக கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்துள்ளது என பெருமையாக தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.  

என் மாமியாரின் கனவு நனவானது: பிரதமர் மோடி சந்திப்பு குறித்து பிரபல நடிகை..!

சமீபத்தில் பிரதமர் மோடி சென்னை வந்த நிலையில் பிரபல நடிகையின் மாமியார் அவரை சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டு எனது மாமியாரின் கனவு நினைவானது என்று குறிப்பிட்டுள்ளார்.  

'கேப்டன் மில்லர்' கதை பிரபல நடிகர் எழுதிய நாவலின் காப்பியா? அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான 'கேப்டன் மில்லர்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. வசூலிலும் திருப்திகரமாக இருப்பதாக

ஷகிலா - ஷீத்தல் மோதல்.. சமாதானம் செய்ய வந்த பெண் வழக்கறிஞர் மீது தாக்குதல்: போலீஸில் புகார்..!

நடிகை ஷகிலா மற்றும் அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் நடந்ததாகவும் இந்த மோதலை சமாதானம் செய்து வைக்க வந்த பெண் வழக்கறிஞர்கள்