திடீரென வெளிநாட்டுக்கு கிளம்பிய ரஜினிகாந்த்.. எந்த நாடு? என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென வெளிநாட்டுக்கு கிளம்பி இருப்பதாகவும் அவர் எந்த நாட்டுக்கு சென்றார்? என்ன காரணத்துக்காக செல்கிறார்? என்ற விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களாக ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வந்த ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த நிலையில் தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்ற செய்தி வெளியானது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் ’வேட்டையன்’ படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து ஓய்வு எடுக்க நடிகர் ரஜினிகாந்த் அபுதாபி சென்றுள்ளதாகவும் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் அபுதாபி செல்லும் விமானத்தில் கிளம்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. ஒரு வாரம் ரஜினிகாந்த் அபுதாபியில் தங்கி இருந்து ஓய்வு எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் அதன் பிறகு அவர் சென்னை திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சென்னை விமான நிலையத்தில் ரஜினியை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகத்தில் ’தலைவர்’ என்று கோஷமிட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ரஜினிகாந்த் அபுதாபியில் ஓய்வெடுத்துவிட்டு சென்னை திரும்பியதும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ’கூலி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
#Thalaivar ✈️ to Abu Dhabi ❤️@abirampushparaj meet panirunga ❤️#Jailer | #Rajinikanth | #VettaiyanFromOctober | #Hukum | #CoolieDisco | #Vettaiyan | #superstar @rajinikanth | #Jailer2 | #Coolie | #SuperstarRajinikanth | #CoolieTitleTeaser pic.twitter.com/KJBskxlfgK
— Suresh Balaji (@surbalu) May 16, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com