கோல்டன் விசா வாங்கியவுடன் மோடி திறந்து வைத்த கோவிலுக்கு சென்ற ரஜினிகாந்த்.. வைரல் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கிய நிலையில் இன்று அவர் பிரதமர் மோடி அபுதாபியில் திறந்து வைத்த இந்து கோயிலுக்கு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர் ஓய்வு எடுப்பதற்காக அபுதாபி சென்றார். அங்கு அவர் லூலு மால் குழுமத்தின் தலைவரை சந்தித்த நிலையில் அவருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா கொடுத்து கெளரவித்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது அவர் அபுதாபியில் உள்ள இந்து கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
இது குறித்து வெளியான வீடியோவில் ரஜினிகாந்த் அந்த கோவிலின் ஒவ்வொரு பகுதியாக பார்த்து ரசிக்கும் காட்சிகள் இருந்தது என்பதும் தலைமை அர்ச்சகரிடம் அவர் மரியாதை செலுத்திய காட்சிகள் உள்ளன. மேலும் இந்த கோவில் குறித்தும், கோவிலை கட்டியது குறித்தும் ரஜினிகாந்திடம் விளக்கிய தலைமை அர்ச்சகர் ரஜினிகாந்த்துக்கு மாலை அணிவித்து ஆசி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அபுதாபியில் 27 ஏக்கரில் 7 கோபுரத்துடன் 800 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சுவாமி நாராயணன் கோவிலை திறந்து வைத்த நிலையில் இந்த கோயிலுக்கு தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் நாடான அபுதாபியில் 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த கோவில் வெள்ளை சலவை கற்களால் கட்டப்பட்டது. இந்த கோயிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Thalaivar visited #AbuDhabiMandir yesterday ❤️❤️#Rajinikanth | #superstar @rajinikanth | #superstarRajinikanth | #Coolie | #Jailer | #Vettaiyan | #Hukum pic.twitter.com/0wxFpMOljj
— Suresh Balaji (@surbalu) May 24, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com