வைரலாகும் ரஜினியின் சூப்பர் ஸ்டைல் புகைப்படம்

  • IndiaGlitz, [Wednesday,May 02 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவிற்கு உடல் பரிசோதனைக்கு சென்றார் என்பது தெரிந்ததே. பொதுவாக அவர் அமெரிக்காவில் இருந்தாலும் ஊடகங்கள் விரட்டி விரட்டி புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து வெளியிடுவதுண்டு

ஆனால் இந்த முறை அமெரிக்காவில் இருக்கும் ரஜினியின் ஒருசில புகைப்படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரஜினி எஸ்கலேட்டரில் இருக்கும் ஸ்டைலான புகைப்படம் வெளிவந்து இணையதளங்களில் வைரலான நிலையில் சற்றுமுன்னர் சூப்பர் ஸ்டைலில் ஒரு புகைப்படம் வெளியாகியுள்லது.

இந்த புகைப்படத்தில் கோடு சூட் அணிந்த ரஜினிகாந்த், ஸ்டைலாக நிற்கும் வகையில் உள்ளது. இந்த புகைப்படம் கடந்த சில நிமிடங்களாக இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது