'SK21' படத்தின் டீசரை பார்த்த ரஜினி, விஜய் பட இயக்குனர்.. என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் ஆகியோர்களின் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’SK21’ படத்தின் டீசரை பார்த்து தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’SK21’. இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது என்பதும் அடுத்த மாதம் சிவகார்த்திகேயன் பிறந்தநாளின் போது இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வீடியோ வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’, தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ உள்பட ஒருசில படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன், ’SK21’ படத்தின் டீசர் பார்த்ததாகவும் அதை பார்த்து தான் மிகவும் ஆச்சரியம் அடைந்து விட்டதாகவும் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் ஒரு புதிய வடிவில் சிவகார்த்திகேயனை பார்க்கலாம் என்றும் ’SK21’ படத்தின் குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Woah!!!! Just saw #SK21 first look teaser!! It’s complete rage ! Can’t wait for the world to see what you have made on this emotional journey @Rajkumar_KP 👏👏 big applause to team #SK21 !
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) January 21, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com