ஆண்டவன் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும்: ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Sunday,January 28 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் நமக்கு ஆண்டவன் கொடுத்த இந்த நல்ல வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் இந்த வீடியோவில் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் மிகப்பெரிய 'பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதே நம்முடைய அனைவரது நோக்கம். நாம் அனைவரும் ஒற்றுமையாக, ஒழுக்கமாக, கட்டுப்பாட்டுடன் இருந்தால் எதுவேண்டுமானாலும் சாதிக்கலாம். நம்முடைய இதயத்தை எண்ணங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும். அரசியல் என்பது பொதுநலம். சுயநலம் அல்ல. மக்களுக்கு நல்லது செய்வது என்பதே நமது நோக்கம். இதில் நாம் எதையும் எதிர்பார்க்கக் கூடாது.

தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். மற்ற மாநிலங்கள் நம்மை பார்த்து வியந்து எப்படி இவர்களால் இந்த அளவுக்கு உயர முடிந்தது என்று பார்க்கும் வகையில் இருக்க வேண்டும். இது நமக்கு கடவுள் கொடுத்துள்ள ஒரு நல்ல வாய்ப்பு. இந்த வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான் எப்போதும் கூறுவது போல் நம்முடைய குடும்பத்தை சரியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகே, சமுகத்தைக் கவனித்தால் போதுமானது. குடும்பத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வாருங்கள் என்று கூற மாட்டேன். அது எனக்கு பிடிக்கவும் பிடிக்க்காது.

பொதுவாழ்வில் இறங்கியப் பிறகு பதவியைப் பார்க்கக் கூடாது. மக்களுக்கு சேவை செய்வதுதான் முக்கியம். ஒருசிலர் பதவி கிடைக்கவில்லை என்று எண்ண வேண்டாம். தலைமை சரியாகத்தான் முடிவெடுக்கும். நமக்குள் பிரச்சனைகள் வருமா? என்று அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. நீங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என்று நம்பிக்கை உள்ளது' என்று ரஜினிகாந்த் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

More News

நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகளின் முழுப்பட்டியல்:

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி நார்வே தமிழ் திரைப்பட விழா கெளரவித்து வரும் நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு விருதுகள்

ரஜினியின் தலைகீழ் பார்வை நாட்டுக்கு நல்லதல்ல: மு.க.ஸ்டாலின்

ஆன்மிகத்தைத் தனியாகவும் அரசியலைத் தனியாகவும் பார்க்க அது நமக்கு கத்து தருது. ரஜினி மறுபடி தலைகீழாக்கப் பார்க்கிறார். நாட்டுக்கு அது நல்லது இல்லை!

தேசிய கீதத்தை நாட்டுப்புற பாடல் என கூறினாரா மு.க.ஸ்டாலின்?

சமீபத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது காஞ்சி விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செலுத்த தவறிய விவகாரம் பெரும் சர்ச்சையை

அக்சயகுமாருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க மறுத்த ஷங்கர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள '2.0' படத்தின் போஸ்ட் புரடொக்ச்ன்ஸ் மற்றும் VFX பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அக்சயகுமார் வேடத்தை ஏற்ற ஜெயம் ரவி

அக்சயகுமார் நடித்த இந்தியன் சீக்ரெட் ஏஜண்ட் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஏ.கே.அஹ்மத் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'என்றென்றும் புன்னகை மற்றும் 'மனிதன்' படங்களை இயக்கியவர்