ஆண்டவன் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும்: ரஜினிகாந்த்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் நமக்கு ஆண்டவன் கொடுத்த இந்த நல்ல வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் இந்த வீடியோவில் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் மிகப்பெரிய 'பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதே நம்முடைய அனைவரது நோக்கம். நாம் அனைவரும் ஒற்றுமையாக, ஒழுக்கமாக, கட்டுப்பாட்டுடன் இருந்தால் எதுவேண்டுமானாலும் சாதிக்கலாம். நம்முடைய இதயத்தை எண்ணங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும். அரசியல் என்பது பொதுநலம். சுயநலம் அல்ல. மக்களுக்கு நல்லது செய்வது என்பதே நமது நோக்கம். இதில் நாம் எதையும் எதிர்பார்க்கக் கூடாது.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். மற்ற மாநிலங்கள் நம்மை பார்த்து வியந்து எப்படி இவர்களால் இந்த அளவுக்கு உயர முடிந்தது என்று பார்க்கும் வகையில் இருக்க வேண்டும். இது நமக்கு கடவுள் கொடுத்துள்ள ஒரு நல்ல வாய்ப்பு. இந்த வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான் எப்போதும் கூறுவது போல் நம்முடைய குடும்பத்தை சரியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகே, சமுகத்தைக் கவனித்தால் போதுமானது. குடும்பத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வாருங்கள் என்று கூற மாட்டேன். அது எனக்கு பிடிக்கவும் பிடிக்க்காது.
பொதுவாழ்வில் இறங்கியப் பிறகு பதவியைப் பார்க்கக் கூடாது. மக்களுக்கு சேவை செய்வதுதான் முக்கியம். ஒருசிலர் பதவி கிடைக்கவில்லை என்று எண்ண வேண்டாம். தலைமை சரியாகத்தான் முடிவெடுக்கும். நமக்குள் பிரச்சனைகள் வருமா? என்று அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. நீங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என்று நம்பிக்கை உள்ளது' என்று ரஜினிகாந்த் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
தன் தொண்டர்களுக்காக ரஜினிகாந்த் அவர்கள் பேசிய வீடியோ. pic.twitter.com/JmSZ5TKKwy
— JSK.GOPI @Tamil film industry (@SKGopi3317) January 27, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com