கொரோனா விழிப்புணர்வு குறித்த ரஜினியின் வீடியோ

கொரோனா வைரஸ் பீதியால் இந்தியாவே அச்சம் கொண்டிருக்கும் நிலையில் நாளை ஒரு நாள் சுய ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்கள் சமீபத்தில் கேட்டுக்கொண்டார். இதனை எதிர்க்கட்சி தலைவர்கள் கூட வரவேற்று வரும் நிலையில் இதுகுறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது ஸ்டேஜில் உள்ளது. அது மூன்றாவது ஸ்டேஜிற்கு போய்விடக்கூடாது. கொரோனா வைரஸ் 12 மணி நேரத்தில் இருந்து 14 மணி நேரம் வரை பரவாமல் தடுத்தாலே அது மூன்றாவது ஸ்டேஜுக்கு போகாமல் இருப்பதை நாம் தடுக்கலாம்.

அதற்காகத்தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரும் 22ஆம் தேதி ஒரு சுய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். இதே மாதிரி ஒரு எச்சரிக்கையை இத்தாலி நாடு இரண்டாவது ஸ்டேஜில் இருக்கும் போது மக்களை எச்சரித்தது. ஆனால் அந்த நாட்டு மக்கள் அதை உதாசீனப்படுத்தினர். அதனால் பல ஆயிரம் மக்கள் பலியாகினர்.

அதே மாதிரி நிலைமை நமது இந்தியாவில் வரக்கூடாது. ஆக எல்லாரும் 22 ஆம் தேதி இந்த சுய ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இந்த வைரஸ் பரவாமல் இருக்க அதை தடுப்பதற்கு போராடி வரும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ அலுவலர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து வேலை செய்கிறார்கள் அவர்களுக்கு பிரதமர் கூறியபடி 22ஆம் தேதி 5 மணிக்கு அவர்களை மனதார பாராட்டுவோம். அவர்கள் அனைவரும், மற்றும் அவர்களது குடும்பம் நன்றாக இருக்க ஆண்டவனை பிரார்த்தனை செய்வோம். இவ்வாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

More News

விடுமுறையல்ல இது.. ஆபத்து.. என்ன சொன்னாலும் மக்கள் புரிந்து கொள்ளவில்லை..! விஜய பாஸ்கர்.

இத்தாலியிலும் இதே போலத்தான் மக்கள் இதை சாதாரண காய்ச்சலாக நினைத்தனர். ஆனால் 2 வாரங்கள் கழித்து கொரோனா தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியது.

கொரோனாவில் இருந்து தப்பிக்க பொருட்களை எப்படி கையாள்வது???

கொரோனா வைரஸ் பொருட்களின்மீது பல மணிநேரம் குடியிருக்கும் தன்மையுடையது என ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன.  

தண்டவாளத்தில் படுத்து செல்பி எடுத்த காதலர்கள்: அடுத்த நிமிடம் தற்கொலை

ரயில் தண்டவாளத்தில் படுத்தபடியே செல்பி எடுத்துக் கொண்ட காதலர்கள் அடுத்த நிமிடம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆம்பூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இதுதான் கொரோனா வைரஸ் சோதனை செய்யும் லட்சணமா? சஸ்பெண்ட் ஆன அதிகாரி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த

கொரோனா வைரஸ் குறித்து 'மாஸ்டர்' நடிகரின் விழிப்புணர்வு வீடியோ

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை திரையுலகை சேர்ந்த பலர் பதிவு செய்து வரும் நிலையில் 'மாஸ்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த் சாந்தனு