அவரை போல் இன்னொருவர் இந்த உலகத்தில் தோன்ற முடியாது: ரஜினிகாந்த் வீடியோ வரைல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது என்பதும் டெல்லி சென்று அந்த விருதை அவருடைய மனைவி பிரேமலதா பெற்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் விருது கொடுத்து கௌரவித்தது குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
என்னுடைய அருமை நண்பர் அமரர் விஜயகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது கொடுத்து கௌரவித்துள்ளது நமக்கெல்லாம் இது மிகவும் மகிழ்ச்சி. அது மட்டும் இல்லாமல் இந்த விருது அவருடைய பெயருக்கு இன்னும் பெருமை சேர்க்கும்.
விஜயகாந்த் நம்முடன் இல்லை என்பதை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. டக் என்று தோன்றி பல சாதனைகள் செய்து அப்படியே மறைந்து விட்டார். இனிமேல் விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது, அவரை நான் மிகவும் மிஸ் பண்ணுகிறேன்.
மதுரையில் பிறந்த ஒரு மதுரை வீரன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், அவர் நாமம் வாழ்க, நன்றி’ என்று ரஜினிகாந்த் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#SuperstarRajinikanth shared his wishes and emotional note on late captain @iVijayakanth sir for receiving Padma Bhusan award
— Suresh Balaji (@surbalu) May 15, 2024
“ My dear friend . I miss him so much . It’s proud moment as his life journey recorded in Padma awards . Real Madurai Veeran “ #Rajinikanth |… pic.twitter.com/Xqx5t0beza
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments