'காலா' கண்ணாடியுடன் அமெரிக்காவில் வலம் வரும் ரஜினி: வைரலாகும் புகைப்படங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு உடல்பரிசோதனை செய்வதற்காக சென்றார் என்பது தெரிந்ததே. 10 நாள் அமெரிக்காவில் இருக்கும் ரஜினிகாந்த், உடல் பரிசோதனை செய்து கொள்வது மட்டுமின்றி அமெரிக்கா, கனடா நாடுகளின் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் ரஜினிகாந்த், காலா படத்தில் அணிந்திருந்த கண்ணாடியுடன் விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த புகைப்படங்களை எடுத்த அமெரிக்க ரசிகர்கள் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்களை உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments