நமது உண்மையான ஆஸ்தி இதுதான்: ரஜினிகாந்த்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 2வது நாளாக ரசிகர்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்து வருகிறார். இன்று நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் முன்னர் சிறிது நேரம் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
இன்று இரண்டாம் நாளாக ரசிகர்களை சந்திக்கும் விழா நடைபெறுகிறது. மீண்டும் எனது நண்பர் மகேந்திரன் மற்றும் கலைஞானம் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
ரசிகர்கள் ரொம்ப ஒழுக்கத்துடனும் கட்டுப்பாடுனும் இருக்கின்றீர்கள், அது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை தருகிறது. மேலும் மறுபடி மறுபடியும் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம், நமக்கு குடும்பம்தான் முக்கியம், அவர்கள் தான் நம்முடைய வாழும் தெய்வங்கள். குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், அவர்கள் தான் நமது ஆஸ்தி.
மேலும் ஆக்கபூர்வமான விஷயங்களை மட்டுமே பாருங்கள். அதற்கு நிறைய படியுங்கள். அழிவுபூர்வமான விஷயங்களை மனதில் ஏற்றி கொள்ள வேண்டாம். இன்னும் நிறைய பேசவேண்டியதுள்ளது, பேசுவோம்' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout