ரஜினியின் டுவிட்டர் பக்கம் ஹேக்கிங் செய்யப்பட்டதா? செளந்தர்யா தகவல்

  • IndiaGlitz, [Wednesday,August 03 2016]

உலக அளவில் பிரபலமான விஐபிக்களின் ஃபேஸ்புக், டுவிட்டர் கணக்குகள் அவ்வப்போது ஹேக்கர்களால் ஹேக்கிங் செய்யப்பட்டு வருவது குறித்த செய்தியை அடிக்கடி நாம் பார்த்துள்ளோம். அதேபோல் 'கபாலி' மூலம் உலகப்புகழ் பெற்ற நமது சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் டுவிட்டர் கணக்கும் நேற்றிரவு திடீரென ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த தகவலை ரஜினியின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
ரஜினியின் டுவிட்டர் பக்கம் ஒருசில மணி நேரம் மட்டுமே ஹேக்கர்களின் கையில் இருந்ததாகவும், தற்போது அந்த பக்கம் மீட்கப்பட்டு இயல்பு நிலையில் இருப்பதாகவும், இதுகுறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் செளந்தர்யா மேலும் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் டுவிட்டர் பக்கத்தில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருசில மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே டுவிட்டர் பக்கத்திற்கு வரும் அவரது டுவிட்டர் பக்கத்தை ஹேக்கர்கள் ஏன் ஹேக்கிங் செய்தார்கள் என்பது மர்மமாகவே உள்ளது.