சுஜித் மரணம் குறித்து ரஜினிகாந்த் டுவீட்!

  • IndiaGlitz, [Tuesday,October 29 2019]

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த 2 வயது சுஜித்தின் இழப்பை இன்னும் தமிழக மக்களால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை. இன்றைய தலைப்பு செய்தியாக மாறியுள்ள சுஜித்தை இத்தனை விஞ்ஞானம் இருந்தும் வெறும் 86 அடியில் இருந்து மீட்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. எனவேதான் ‘சாரி சுஜித்’ என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது

இந்த நிலையில் சுஜித்தின் மறைவிற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் தங்களுடைய சமூக வலைத்தள் பக்கங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சுஜித் மரணம் குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது: சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.