கே.வி.ஆனந்த் மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி வெளிவந்த நிலையில் தற்போது அவர் கொரோனாவால் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது
கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கே.வி.ஆனந்த் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கொரோனாவால் கேவி ஆனந்த் உயிரிழந்ததால் அவரது உடல் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படாது என்றும் மருத்துவமனையில் இருந்து நேராக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் இன்னும் சற்று முன்னர் பெசன்ட் நகர் மயானத்திற்கு மருத்துவமனையில் இருந்து அவருடைய உடல் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் இன்னும் சில நிமிடங்களில் அவருடைய உடல் இறுதிச் சடங்குகளுடன் தகனம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் கேவி ஆனந்த் மறைவிற்கு ஏற்கனவே பாரதிராஜா, வைரமுத்து, ஏஆர் முருகதாஸ் உள்பட பல பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கலை தெரிவித்துள்ள நிலையில் சற்று முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டரில் இரங்கல் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்.
மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்.
— Rajinikanth (@rajinikanth) April 30, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com