வன்முறையின் உச்சகட்டமே இதுதான்: ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Wednesday,April 11 2018]

நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் அண்ணா சாலையில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடந்தது மட்டுமின்றி ஒருசில அரசியல் கட்சி தொண்டர்கள் காவல்துறை அதிகாரிகளையும் தாக்கினர். இதுகுறித்து வீடியோ இணையதளங்களில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் காவல்துறையினர் மீதான தாக்குதலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்' என்று கூறியுள்ளார். 

ரஜினியின் இந்த பதிவுக்கு வழக்கம்போல் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகின்றன.