மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிடுங்கள்: ரஜினிகாந்த் டுவீட்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு இருக்கும் நிலையில் ஊரடங்கு காரணமாக ஏற்கனவே பொதுமக்கள் வேலையின்றி, வருமானம் இன்றி அத்தியாவசிய தேவைக்கே காசில்லாமல் உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவின் பாதிப்பு நீங்கும் முன்னரே, ஊரடங்கு உத்தரவு முடியும் முன்னரே தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறந்துவிட்டதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

குறிப்பாக கமல்ஹாசன் இதுகுறித்து தனது ஆவேசமான எதிர்ப்பை சமூக வலைத்தளத்தின் மூலம் வெளிப்படுத்தி வருவதோடு சட்டரீதியிலான நடவடிக்கையையும் எடுத்து வருகிறார். டாஸ்மாக் கடைகளை மூட ஐகோர்ட் உத்தரவிட்டதற்கு அவரது கட்சி சார்பில் பதிவு செய்யப்பட்ட வழக்கும் ஒரு காரணம் ஆகும்.

இந்த நிலையில் கமல்ஹாசனை அடுத்து ரஜினிகாந்தும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் டாஸ்மாக் கடையை திறக்க முயற்சிக்கும் தமிழக அரசுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து#கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்’ என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினியின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

ரஜினி கிண்டல் செய்ததை 36 வருடங்களுக்கு பின் தெரிவித்த பிரபல நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை பற்றி தன்னுடைய அம்மாவிடம் கிண்டல் செய்ததை 36 வருடங்கள் கழித்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நடிகை ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கோயம்பேடு தொடர்பால் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா: எங்கே தெரியுமா?

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும்,

கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வரும் புதிய குழப்பம்!!! இது தடுப்பூசி ஆய்வில் தாமதத்தை ஏற்படுத்துமா???

கொரோனா நாவல் SARS-Covid-2 வைரஸ் பரவும் வேகமும் அதன் தன்மையும் நாளுக்கு நாள் மாறுபட்டு வருவதாக விஞ்ஞானிகள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.

தனிமனித இடைவெளியுடன் 'வாத்தி கம்மிங்' டான்ஸ்: அனிருத் ஆச்சரியம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்தது என்பது தெரிந்ததே.

சுப்ரீம் கோர்ட் போனாலும் விடமாட்டேன்: கமல்ஹாசன்

தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி முதல் சென்னை தவிர பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் இரண்டே நாட்களில் சுமார் 300 கோடி டாஸ்மாக் சரக்குகள் விற்பனை ஆகின என்பது குறிப்பிடத்தக்கது