மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிடுங்கள்: ரஜினிகாந்த் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு இருக்கும் நிலையில் ஊரடங்கு காரணமாக ஏற்கனவே பொதுமக்கள் வேலையின்றி, வருமானம் இன்றி அத்தியாவசிய தேவைக்கே காசில்லாமல் உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவின் பாதிப்பு நீங்கும் முன்னரே, ஊரடங்கு உத்தரவு முடியும் முன்னரே தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறந்துவிட்டதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
குறிப்பாக கமல்ஹாசன் இதுகுறித்து தனது ஆவேசமான எதிர்ப்பை சமூக வலைத்தளத்தின் மூலம் வெளிப்படுத்தி வருவதோடு சட்டரீதியிலான நடவடிக்கையையும் எடுத்து வருகிறார். டாஸ்மாக் கடைகளை மூட ஐகோர்ட் உத்தரவிட்டதற்கு அவரது கட்சி சார்பில் பதிவு செய்யப்பட்ட வழக்கும் ஒரு காரணம் ஆகும்.
இந்த நிலையில் கமல்ஹாசனை அடுத்து ரஜினிகாந்தும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் டாஸ்மாக் கடையை திறக்க முயற்சிக்கும் தமிழக அரசுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து#கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்’ என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினியின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
— Rajinikanth (@rajinikanth) May 10, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com