காவிரியை அடுத்து ஸ்டெர்லைட் பிரச்சனைக்கும் குரல் கொடுத்த ரஜினி

  • IndiaGlitz, [Saturday,March 31 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறிய கருத்தை ஏற்கனவே பார்த்தோம். காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும் என்று ரஜினிகாந்த் அழுத்தமாக தனது கருத்தை பதிவு செய்திருந்தார்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தென்மாவட்டங்களை உலுக்கி வரும் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்தும் தற்போது அவர் கருத்து கூறியுள்ளார். ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களா அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது' என்று ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் நாளை கமல்ஹாசன் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இன்று ரஜினிகாந்த் இதுகுறித்து கருத்து கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆன்மீக அரசியல் என்பது மிகப்பெரிய பொய்: ரஜினியை போட்டுத் தாக்கும் ஆ.ராசா

ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வரவுள்ளதாகவும், தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் கூறியுள்ள நிலையில் அவரது ஆன்மீக அரசியலை பல அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.

கிறிஸ்டோபர் நோலனிடம் கமல் மன்னிப்பு கேட்டது ஏன் தெரியுமா?

ஹாலிவுட் சூப்பர் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் அவர்களை கமல் சந்திக்கவுள்ளார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அந்த சந்திப்பு தற்போது நடைபெற்றுவிட்டது.

மிஸ்டர் இந்தியா இயக்குனருக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்

பாலிவுட் திரையுலகில் 'மிஸ்டர் இந்தியா' உள்பட பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சேகர் கபூர், இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானவர்.

விஜய் வில்லனுக்கு ஜோடியாக்கும் ஸ்ருதிஹாசன்

விஜய் நடித்த துப்பாக்கி என்ற வெற்றி படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் வித்யூத் ஜம்மாவால். இவர் பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரைத்துறை பிரச்சனையை அரசுக்கு கொண்டு செல்ல முடிவு: விஷால் அறிவிப்பு

திரைத்துறையில் இருக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைக்குமாறு அரசிடம் வேண்டுகோள் வைக்க முடிவு செய்திருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.