சினிமா உலகம் ஒரு திறமைசாலியை இழந்துவிட்டது: ஸ்ரீதேவி மரணம் குறித்து ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Sunday,February 25 2018]

பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு மரணம் அடைந்த செய்தி ஒவ்வொரு சினிமா ரசிகனுக்கு பேரிடியான செய்தியாக இருந்தது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் ஸ்ரீதேவிக்கு இரங்கல் தெரிவித்ததை பார்த்தோம். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் ஸ்ரீதேவி மரணம் குறித்து கூறியதாவது: நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். நான் ஒரு அன்பான நண்பனை இழந்துவிட்டேன், சினிமா உலகம் ஒரு உண்மையான திறமைசாலியை இழந்துவிட்டது. என் இதயம் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வருந்துகிறது. அவர்களுடைய வேதனையை உணர்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்' என்று கூறியுள்ளார்.

ரஜினிகாந்த்துடன் ஸ்ரீதேவி, மூன்று முடிச்சு, காயத்ரி, 16 வயதினிலே, தர்மயுத்தம், ஜானி, ராணுவ வீரன், தனிக்காட்டு ராஜா, போக்கிரி ராஜா, அடுத்த வாரிசு, நான் அடிமை இல்லை போன்ற படங்களில் நடித்துள்ளார்.