சட்டத்திற்குப் புறம்பான செயல்? 'சர்கார்' பிரச்சனை குறித்து ரஜினிகாந்த்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று நேற்று அதிமுகவினர் திரையரங்குகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒருசில திரையரங்குகளில் காட்சிகளும் ரத்தானது. இதனையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழுவினர் ஒப்புக்கொண்டனர்.
இந்த நிலையில் திரையரங்குகளை முற்றுகையிடுவது, பேனர்களை கிழிப்பது போன்ற வன்முறை செயல்களில் அதிமுக தொண்டர்கள் ஈடுபடுவதாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். திரையுலகில் இருந்து நேற்று கமல்ஹாசன் முதல் நபராக 'சர்கார்' படத்திற்கு ஆதரவாக டுவீட் ஒன்றை பதிவு செய்தார்
இந்த நிலையில் நேற்று இரவு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் சர்கார் படத்திற்கு ஆதரவாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது: தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கமல், ரஜினி இருவருமே 'சர்கார்' படத்திற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்ததை அடுத்து இன்னும் சில கோலிவுட் பிரபலங்களும் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments