சட்டத்திற்குப் புறம்பான செயல்? 'சர்கார்' பிரச்சனை குறித்து ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Friday,November 09 2018]

விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று நேற்று அதிமுகவினர் திரையரங்குகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒருசில திரையரங்குகளில் காட்சிகளும் ரத்தானது. இதனையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழுவினர் ஒப்புக்கொண்டனர்.

இந்த நிலையில் திரையரங்குகளை முற்றுகையிடுவது, பேனர்களை கிழிப்பது போன்ற வன்முறை செயல்களில் அதிமுக தொண்டர்கள் ஈடுபடுவதாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். திரையுலகில் இருந்து நேற்று கமல்ஹாசன் முதல் நபராக 'சர்கார்' படத்திற்கு ஆதரவாக டுவீட் ஒன்றை பதிவு செய்தார்

இந்த நிலையில் நேற்று இரவு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் சர்கார் படத்திற்கு ஆதரவாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது: தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கமல், ரஜினி இருவருமே 'சர்கார்' படத்திற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்ததை அடுத்து இன்னும் சில கோலிவுட் பிரபலங்களும் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டின் முன் போலீஸ் குவிந்ததால் பரபரப்பு? கைது நடவடிக்கையா?

'சர்கார்' படத்தில் ஒருசில காட்சிகள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும், தமிழக அரசின் இலவச திட்டங்களை சர்ச்சைக்குரிய வகையில் காட்டியிருப்பதாகவும் கூறி

சென்னை காசி தியேட்டரிலும் 'சர்கார்' பேனர் கிழிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளீயானது. இந்த படம் வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் படம் வெளியாகும் திரையரங்குகள் முன் வானுயர கட் அவுட்டுக்கள் வைத்து அசத்தினர்.

'சர்கார்' படம் ஓடும் திரையரங்குகளில் திடீர் ஆய்வு: முற்றுகிறது நெருக்கடி

விஜய் நடித்த 'சர்கார்' படத்திற்கு அதிமுக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்ததை முதலில் 'மெர்சல்' படத்திற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்ததை போல் சாதாரணமாக பார்க்கப்பட்டது.

விஜய்யால் இந்த அரசை அசைக்க முடியும்: பழ. கருப்பையா

விஜய்க்கு இருக்கும் செல்வாக்கிற்கு அவரால் இந்த அரசை அசைக்க முடியும் என திமுக பிரமுகரும், 'சர்கார்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவருமான பழ.கருப்பையா தொலைக்காட்சி பேட்டி ஒன்றில்

'சர்கார்' படத்திற்கு பாமகவும் எதிர்ப்பு: ஆனால்..வேற காரணம்!

விஜய் நடித்த 'சர்கார்' படத்தை திமுக தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டன. பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்களும் சர்கார் படத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்