அனுபவமே பாடம்: சொத்து வரி பிரச்சனை குறித்து ரஜினி டுவீட்
- IndiaGlitz, [Thursday,October 15 2020]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கான சொத்து வரியை குறைக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணையின்போது நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்குவதாக கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி அதன்பின் ரஜினி தரப்பின் கோரிக்கையை ஏற்று அந்த மனுவை தள்ளுபடி செய்தார்
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ரஜினிகாந்த் இந்த பிரச்சினை குறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது: ராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். #அனுபவமே_பாடம்’ என்று பதிவு செய்துள்ளார்.
வழக்கம்போல் ரஜினியின் இந்த டுவிட்டுக்கு ஆதரவான கமெண்டுக்களும் கேலியும் கிண்டலுடன் கூடிய கமெண்ட்டுக்களும் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
ராகவேந்திரா மண்டப சொத்து வரி...
— Rajinikanth (@rajinikanth) October 15, 2020
நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.
தவறைத் தவிர்த்திருக்கலாம்.#அனுபவமே_பாடம்