ஒரு புது கனவு எனக்கு உருவாகி இருக்கிறது: அம்பானி அரங்கம் குறித்து ரஜினிகாந்த் டுவிட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான அரங்கம் ஒன்று மும்பையில் திறக்கப்பட்டுள்ள நிலையில் அந்த திறப்பு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகளுடன் கலந்து கொண்டார் என்பது ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி இந்தியாவின் பண்பாட்டை விளக்கும் வகையில் ’நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையம்’ என்ற பெயரில் நான்கு அடுக்குகள் கொண்ட ஒரு கலாச்சாரம் மையத்தை உருவாக்கி உள்ளார். 2000 இருக்கைகள் கொண்ட இந்த அரங்கில் கலை நிகழ்ச்சிக்கான அரங்கம், ஸ்டுடியோ உள்பட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவுடன் கலந்து கொண்டார். அவர் மட்டுமின்றி பாலிவுட் திரையுலக பிரபலங்கள் சல்மான் கான், அமீர் கான், தீபிகா படுகோன், வித்யா பாலன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த அரங்கம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் முதல் ஆடம்பர உலகத்தரம் வாய்ந்த கலையரங்கம் மும்பையில் திறக்கப்பட்டுள்ளது. இதை சாத்தியமாக்கிய எனது அருமை நண்பர் முகேஷ் அம்பானிக்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள். இதுபோன்ற தேசபக்தியுடன் கூடிய மனதை கவரும் நடன நிகழ்ச்சிக்கு நீதா அம்பானி மற்றும் அவரது குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தை என்னிடம் இல்லை. இந்த அற்புதமான அரங்கில் நடிக்க வேண்டும் என்ற புது கனவு எனக்கு இப்போது உருவாகி இருக்கிறது. அது விரைவில் நடக்கும் என நம்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
#NMACC pic.twitter.com/qhmexdOWcz
— Rajinikanth (@rajinikanth) April 1, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments