என் வாழ்நாளில் ஒரு கருப்பு நாள்: ரஜினிகாந்த் இரங்கல்

  • IndiaGlitz, [Tuesday,August 07 2018]

திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. திமுக தொண்டர்கள் கதறி அழுது தேற்றுவதற்கு கூட ஆளில்லாமல் உள்ளனர்.

இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் நீண்ட நாள் நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும் என்று ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள்.

அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்