கந்தனுக்கு அரோகரோ: கந்தசஷ்டி விவகாரத்திற்கு குரல் கொடுத்த ரஜினி

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவுக்கு முருக பக்தர்கள், இந்து மத ஆர்வலர்கள் மட்டுமின்றி நடுநிலையாளர்களும் பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து தமிழக அரசு அதிரடி அதிரடி நடவடிக்கை எடுத்து கருப்பர் கூட்டம் நிர்வாகிகளை கைது செய்தது. அது மட்டுமின்றி கருப்பர் கூட்டம் யூட்யூப்பில் இருந்து சுமார் 500 வீடியோக்கள் நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட கருப்பர் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் ரஜினியும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் நேற்று பாஜக தமிழக தலைவர் எல்,முருகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் சற்று முன்னர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி, கொந்தளிக்கச் செய்த இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி, தவறு செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மதத் துவேஷமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும். ஒழியனும். எல்லா மதமும் சம்மதமே. கந்தனுக்கு அரோகரா!! என்று பதிவு செய்துள்ளார். ரஜினியின் இந்த டுவீட் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

கள்ளப்புருஷனை விட்டுத்தராத 2வது மனைவி: கத்தியால் குத்திய கணவர்

சென்னையை சேர்ந்த ஒருவரின் இரண்டாவது மனைவி தனது கள்ள புருஷனை விட்டுத்தர முடியாது என பிடிவாதமாக இருந்ததால் அவரது கணவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

வேலையை பாருங்கள்: கவிஞர் வைரமுத்துவின் ஆவேச விட்டால் பரபரப்பு 

கவியரசர் கவியரசு வைரமுத்து குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பகிரப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

குவைத்தின் புதியச் சட்டத்திருத்தம்: இந்தியர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுமா??? 

அமெரிக்கா தன் நாட்டில் உள்ள வேலை வாய்ப்புக்களை தனது மக்களுக்கே கொடுக்க வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி H-1B விசாக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: மொத்தம் 17 எம்.எல்.ஏக்களுக்கு பாதிப்பு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு

வனிதா டுவிட்டரை விட்டு வெளியேற நயன்தாரா டுவீட் காரணமா?

நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தது பெரும் சர்ச்சையாகி சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றது