மறைந்த காஞ்சி பெரியவருக்கு ரஜினிகாந்த் இரங்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று காலை காஞ்சி பெரியவர் ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் உடல்நல கோளாறு காரணமாக காலமானார். அவரது இறுதிச்சடங்கும் நாளை காலை நடைபெறும் என சங்கரமடம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் காஞ்சி சங்கராச்சாரியார் மறைவிற்கு குடியரசு தலைவர், பிரதமர், தமிழக கவர்னர், முதல்வர், துணை முதல்வர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர். மேலும் கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் இரங்கல் அறிக்கையை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் காலையில் மறைந்த சங்கராச்சாரியாரின் மறைவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன்னர் தனது சமூக வலைத்தளத்தளத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது: பூஜ்யஸ்ரீ ஸ்ரீ காஞ்சி பெரியவருடைய ஆத்மா பரமாத்மாவுடன் இணைந்த இந்த நாளில், அவரை இழந்து வாடும் பக்தர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments