மறைந்த காஞ்சி பெரியவருக்கு ரஜினிகாந்த் இரங்கல்

  • IndiaGlitz, [Wednesday,February 28 2018]

இன்று காலை காஞ்சி பெரியவர் ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் உடல்நல கோளாறு காரணமாக காலமானார். அவரது இறுதிச்சடங்கும் நாளை காலை நடைபெறும் என சங்கரமடம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் காஞ்சி சங்கராச்சாரியார் மறைவிற்கு குடியரசு தலைவர், பிரதமர், தமிழக கவர்னர், முதல்வர், துணை முதல்வர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர். மேலும் கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் இரங்கல் அறிக்கையை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் காலையில் மறைந்த சங்கராச்சாரியாரின் மறைவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன்னர் தனது சமூக வலைத்தளத்தளத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது: பூஜ்யஸ்ரீ ஸ்ரீ காஞ்சி பெரியவருடைய ஆத்மா பரமாத்மாவுடன் இணைந்த இந்த நாளில், அவரை இழந்து வாடும் பக்தர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்' என்று கூறியுள்ளார்.

More News

காஞ்சி சங்கரர் மறைவிற்கு கமல்ஹாசன் கட்சி இரங்கல்

இன்று காலை காலமான காஞ்சி சங்கராச்சாரியர் ஜெயேந்திரர் அவர்களுக்கு இந்தியாவில் உள்ள முன்னணி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கேரள அரசின் புதிய முயற்சிக்கு கமல்ஹாசன் பாராட்டு

இந்தியாவிலேயே கேரள மாநிலம் பல விஷயங்களில் முன்னோடியாக இருந்தது போல் மனிதக்கழிவுகளை சுத்தம் செய்யும் ரோபோ இயந்திரத்தை கேரள மாநிலம் இந்தியாவில் முதல் மாநிலமாக அறிமுகம் செய்துள்ளது.

வாழ்க்கை குறித்து மிக எளிமையான விளக்கம் அளித்த விஜய்சேதுபதி

திரையுலகில் எந்தவித பின்புலமும் இல்லாமல் பல்வேறு தோல்விகள் அவமானங்களை சந்தித்து, கடின உழைப்பின் மூலம் மட்டுமே முன்னேறிய ஒருசிலரில் விஜய்சேதுபதியும் ஒருவர்.

ரூ.15,500 கோடி இழப்பு: திவால் ஆகின்றதா ஏர்செல்?

சமீபத்தில் தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் திடீரென ஏர்செல் சேவைகள் முடங்கியது. மொபைல்போன் என்பது அனைத்திற்கும் அத்தியாவசியம் என்ற நிலையில் திடீரென ஏர்செல் சேவை

ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை தருவது சரியா?

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மரணம் இந்திய திரையுலகை மட்டுமின்றி அனைவரையும் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்திய நிலையில் சற்றுமுன் மும்பையில் அவருடைய இறுதி ஊர்வலம் தொடங்கிவிட்டது