இந்தியாவின் பதிலடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Tuesday,February 26 2019]

புல்வாமா தாக்குதலுக்கு பலியான 40 இந்திய பாதுகாப்பு படை வீரர்களின் வீரமரணத்திற்கு பதிலடி தரும் வகையில் இன்று இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலுக்கு பாராட்டுக்கு குவிந்து வரும் நிலையில் இந்திய ராணுவத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் 'BRAVO INDIA' என்ற இரண்டே இரண்டு வார்த்தைகளை மட்டும் பதிவு செய்து அதன் அருகில் இந்திய தேசிய கொடி படத்தையும் பதிவு செய்துள்ளார். மேலும் கைதட்டும் எமோஜிக்களையும் ரஜினி பதிவு செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ரஜினியின் இந்த டுவீட் பதிவு செய்யப்பட்டு ஒருசில நிமிடங்களே ஆன நிலையில் இந்த டுவீட்டுக்கு சுமார் 13 ஆயிரம் லைக்ஸ்களும், 3 ஆயிரத்திற்கும் மேலான ரீடுவிட்டுகளும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்திய ராணுவத்திற்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

இந்திய தாக்குதலால் எந்த சேதமும் இல்லை: பாகிஸ்தான் ராணுவ தளபதியின் அண்டப்புழுகு

இன்று அதிகாலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன.

உறவினர்கள் கூண்டோடு காலி! மசூர் அசார் தப்பி ஓட்டம்

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய வான்படை அதிரடி தாக்குதல் நடத்தி

பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் எதிரொலி: இந்திய பங்குச்சந்தை சரிவு

பாகிஸ்தானில் இன்று அதிகாலை இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை முற்றிலும் அழித்த நிலையில் இந்த தாக்குதல்

இந்திய விமானப்படையினர் நன்றாக விளையாடியுள்ளனர்: சேவாக்

இந்திய விமானப்படை இன்று பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை அடித்து நொறுக்கியுள்ள நிலையில் இந்திய படைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

குஜராத் மீது ஆளில்லா விமானம்: சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

புல்வாமா தாக்குதலுக்கு இன்று அதிகாலை இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையிடம்