கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை: தமிழக அரசுக்கு ரஜினி கோரிக்கை
- IndiaGlitz, [Thursday,March 19 2020]
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரசை தடுக்கும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்து மக்களும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் படியும் அத்தியாவசிய தேவை இல்லாத நிலையில் வெளியில் வர வேண்டாம் என்று அறுவுறுத்தப்பட்டு வருகின்றன.
அரசியல்வாதிகள் திரையுலக பிரபலங்களும் பொதுமக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கொரோனா வைரஸ் குறித்து ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக் கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கது. அரசோடு சேர்ந்து மக்களும் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால் அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்’ என்று கூறியுள்ளார். ரஜினியின் இந்த வேண்டுகோளை அரசு பரிசீலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
???? pic.twitter.com/Rtz4OJmsUG
— Rajinikanth (@rajinikanth) March 19, 2020