காவிரி மேலாண்மை வாரியம் குறித்து ரஜினியின் அறிவிப்பு
- IndiaGlitz, [Thursday,March 29 2018]
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் விடுத்த 6 வார கால இன்று முடிவடையும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே நியாயமான தீர்வாக இருக்க முடியும் என்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் கடந்த பிப்ரவரி மாதம் இறுதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் 6 வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் குறிப்பிட்டபடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என மத்திய அரசை, தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில், கர்நாடக மாநில தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு மெளனம் காத்தது.
இந்த நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட் கெடு முடிவடையும் தினத்தில் நடிகர் ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான் தீர்வாக இருக்கும் என்று அவரது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும்' என்று கூறியுள்ளார்.
மற்ற அரசியல் கட்சிகள் போல் காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தினமும் குரல் கொடுத்து விளம்பரம் தேடிக்கொள்ளாமல் , நீதிமன்ற கெடு முடிவடைய ஒருசில மணி நேரங்கள் இருக்கும்போது தன் கருத்தை ஆணித்தரமாக ரஜினிகாந்த் பதிவு செய்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.