காவிரி தீர்ப்பு குறித்து ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?
- IndiaGlitz, [Friday,February 16 2018]
தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக நடந்து வந்த காவிரி பிரச்சனைக்கு இன்று சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடகம் 177.25 டிஎம்சி தண்ணீரை தர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த தீர்ப்புக்கு முன்பு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க நடுவர்மன்றம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த தீர்ப்பால் தமிழக விவசாயிகள் கவலை அடைந்துள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த தீர்ப்பு குறித்து கமல் உள்பட பலர் தங்களை கருத்துக்களை தெரிவித்துவிட்ட நிலையில், கர்நாடகத்திற்கு சாதகமாக வந்துள்ள இந்த தீர்ப்பு குறித்து ரஜினி என்ன சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த தீர்ப்பு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதன்படி ''காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.