யார் நீங்க? ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த தூத்துகுடி இளைஞர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறவும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவும் இன்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துகுடிக்கு சென்றார். உயிரிழந்தோர் குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் உடை, பழங்களும் கொடுத்து ஆறுதல் கூறினார்
இந்த நிலையில் ஒரு இளைஞரை மருத்துவமனையில் ரஜினி சந்தித்தபோது, 'அந்த இளைஞர் யார் நீங்க' என்று கேட்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது அதற்கு ரஜினி சிரித்தபடியே ஏதோ கூறினார். ஆனால் அவர் என்ன கூறினார் என்பது அந்த வீடியோவில் தெளிவாக இல்லை. இருப்பினும் அவரது முகத்தில் அதிர்ச்சி இருந்ததை மட்டும் கவனிக்க முடிகிறது.
இந்த வீடியோவை ரஜினியின் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஒருசில நெட்டிசன்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். இருப்பினும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்த பலர் ரஜினிக்கு நன்றி கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout