ரஜினிகாந்த் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Monday,January 27 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று காலை சென்னையில் இருந்து மைசூருக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் அந்த விமானம் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து அந்த விமானத்தில் இருந்த ரஜினிகாந்த் உள்பட மற்ற பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் எனவே ரஜினிகாந்த் ரசிகர்கள் உள்பட யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

ரஜினிகாந்த் சென்ற விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்த விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது மேலும் பயணிகள் செல்வதற்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது