ரஜினியின் கட்சி பெயர், கொடி அறிவிக்கும் தேதி?

  • IndiaGlitz, [Monday,March 19 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இமயமலையில் ஆன்மீக சுற்றுப்பயணத்தில் உள்ளார். அவர் இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினி ஆரம்பிக்க கட்சி பெயர் மற்றும் கொடி தயார் நிலையில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சுமார் 10க்கும் மேற்பட்ட கட்சி பெயர் தயாராக இருப்பதாகவும், ரஜினி வந்தவுடன் அவரிடம் ஆலோசனை செய்து கட்சியின் பெயர் முடிவு செய்யப்படும் என்றும், அதே போல் ஆன்மீக அரசியலை குறிக்கும் வகையில் கட்சியின் கொடியும் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரஜினிகாந்த் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிவிப்பார் என்றும் இந்த அறிவிப்பு சென்னை அல்லது திருச்சியில் நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

More News

ரியல் போலீசுக்கு ரீல் போலீஸ் வழங்கிய நிதியுதவி

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நடந்த ஒருசில சம்பவங்கள்ல் காவல்துறையின் மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், காவல்துறை என்பது மக்களின் சேவையை அடிப்படையாக கொண்ட ஒரு புனிதமான பணி.

சென்னை பாக்ஸ் ஆபீசை கலக்கி வரும் கலகலப்பு2 - நாச்சியார்

மார்ச் 1ஆம் தேதியில் இருந்து புதிய திரைப்படங்கள் வெளிவராததால் ஏற்கனவே வெளிவந்த சுந்தர் சியின் 'கலகலப்பு 2 மற்றும் ஜோதிகாவின் 'நாச்சியார்' ஆகிய படங்கள் சென்னையில் இன்னும் வெற்றிநடை போட்டு வருகிறது.

ஒரே சிக்ஸில் ஹீரோவாக மாறிய தினேஷ் கார்த்திக்

இந்திய கிரிக்கெட் அணியில் தமிழர்கள் இடம்பிடிப்பது ஒரு காலத்தில் அரிதாக இருந்தது. ஆனால் தற்போது இந்திய அணியின் வெற்றியை நிர்ணயிப்பதே நம்ம தமிழக வீரர்கள் என்பது அவ்வப்போது நிரூபணம் ஆகி வருகிறது.

தினேஷ் கார்த்திக்கை பாராட்டாத முரளிவிஜய்: வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

தமிழகத்தை சேர்ந்த இன்னொரு கிரிக்கெட் வீரரான முரளிவிஜய், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் என்று தனது டுவிட்டில் பதிவு செய்துள்ளார்.

மருத்துவமனையில் நடராஜன் அனுமதி: சசிகலாவுக்கு பரோல் கிடைக்குமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.