யார் யார் காலில் விழவேண்டும்: ரசிகர்களுக்கு ரஜினி அறிவுரை
Send us your feedback to audioarticles@vaarta.com
யார் யார் காலில் விழவேண்டும்: ரசிகர்களுக்கு ரஜினி அறிவுரை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாம் கட்டமாக கடந்த 26ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று மூன்றாம் நாளாக மதுரை, நாமக்கல், விருதுநகர் மற்றும் சேலம் பகுதி ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேசியதாவது:
“கொஞ்சம் கூட சலிப்பு இல்லாமல் இருக்கும் உங்கள் முகத்தை பார்க்கும்போது எனக்கு உற்சாகமாக உள்ளது. 1976-ல் மதுரைக்கு முதல் தடவை சென்றிருந்தேன். மீனாட்சியம்மன் கோவிலில் அர்ச்சகர் என்ன நட்சத்திரம் என கேட்டார். ஆனால் எனக்கோ நட்சத்திரம், கோத்திரம் தெரியாது. பின்னர் பெருமாள் நட்சத்திரத்தில் அர்ச்சனை செய்தார்கள். அதன்பின் தெரிந்தது எனது நட்சத்திரம் கூட பெருமாள் நட்சத்திரம்தான் என்று.
மதுரை என்றாலே வீரம்தான். மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்துள்ளீர்கள். உங்களுக்கு கிடா வெட்டி கறி சோறு போட ஆசை. ஆனால் ராகவேந்திரா திருமண மண்டபம் சைவம் என்பதால் வேறு ஒரு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன்.
இரவெல்லாம் பயணம் செய்து வந்தாலும் கொஞ்சம் கூட சோர்வு இல்லாமல் இருக்கும் உங்களை எல்லாம் பார்க்கும்போது உங்களின் உற்சாகம் மற்றும் உணர்ச்சியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் நானும் உங்களைப்போல சினிமா ரசிகனாக இருந்து எல்லாவற்றையும் தாண்டி வந்தவன்தான்.
சிறுவயதில் பெங்களூருவில் இருக்கும்போது ராஜ்குமாரின் பெரிய ரசிகன் நான். சிவாஜி கணேசன், எம்ஜிஆர் இரண்டுபேரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் அப்படி அவர். நானும் சென்று அவரை டச் பண்ணிருக்கேன். ரசிகர்கள் எனது காலில் விழ வேண்டாம். கடவுள், தாய், தந்தை கால்களை தவிர வேறு யார் கால்களிலும் விழக்கூடாது' என்று ரஜினிகாந்த் பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments