யார் யார் காலில் விழவேண்டும்: ரசிகர்களுக்கு ரஜினி அறிவுரை

  • IndiaGlitz, [Thursday,December 28 2017]

யார் யார் காலில் விழவேண்டும்: ரசிகர்களுக்கு ரஜினி அறிவுரை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாம் கட்டமாக கடந்த 26ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று மூன்றாம் நாளாக மதுரை, நாமக்கல், விருதுநகர் மற்றும் சேலம் பகுதி ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேசியதாவது:

“கொஞ்சம் கூட சலிப்பு இல்லாமல் இருக்கும் உங்கள் முகத்தை பார்க்கும்போது எனக்கு உற்சாகமாக உள்ளது. 1976-ல் மதுரைக்கு முதல் தடவை சென்றிருந்தேன். மீனாட்சியம்மன் கோவிலில் அர்ச்சகர் என்ன நட்சத்திரம் என கேட்டார். ஆனால் எனக்கோ நட்சத்திரம், கோத்திரம் தெரியாது. பின்னர் பெருமாள் நட்சத்திரத்தில் அர்ச்சனை செய்தார்கள். அதன்பின் தெரிந்தது எனது நட்சத்திரம் கூட பெருமாள் நட்சத்திரம்தான் என்று. 

மதுரை என்றாலே வீரம்தான். மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்துள்ளீர்கள். உங்களுக்கு கிடா வெட்டி கறி சோறு போட ஆசை. ஆனால் ராகவேந்திரா திருமண மண்டபம் சைவம் என்பதால் வேறு ஒரு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன். 

இரவெல்லாம் பயணம் செய்து வந்தாலும் கொஞ்சம் கூட சோர்வு இல்லாமல் இருக்கும் உங்களை எல்லாம் பார்க்கும்போது உங்களின் உற்சாகம் மற்றும் உணர்ச்சியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் நானும் உங்களைப்போல சினிமா ரசிகனாக இருந்து எல்லாவற்றையும் தாண்டி வந்தவன்தான். 

சிறுவயதில் பெங்களூருவில் இருக்கும்போது ராஜ்குமாரின் பெரிய ரசிகன் நான். சிவாஜி கணேசன், எம்ஜிஆர் இரண்டுபேரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் அப்படி அவர். நானும் சென்று அவரை டச் பண்ணிருக்கேன். ரசிகர்கள் எனது காலில் விழ வேண்டாம். கடவுள், தாய், தந்தை கால்களை தவிர வேறு யார் கால்களிலும் விழக்கூடாது' என்று ரஜினிகாந்த் பேசினார். 
 

More News

விஜய், சூர்யாவுக்கு நேர்மாறானவர் விஷால்: சமந்தா

நான் விஜய், சூர்யாவுடன் நடிக்கும்போது அவர்களிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வேன். ஆனால் விஷாலிடம் அதற்கு நேர்மாறாக ஜாலியாக நடித்தேன்.

2017ஆம் ஆண்டின் டாப் 10 டீசர்: முதல் இரண்டு இடத்தை பிடித்த தளபதி-தல

டாப் 10 டீசர் பட்டியலில் முதல் இடத்தை தளபதி விஜய்யின் 'மெர்சல்' படமும், இரண்டாவது இடத்தில் தல அஜித்தின் விவேகம்' படமும் பெற்றுள்ளது.

நான் ஆர்.கே. நகர் தேர்தலில் நிற்க கூடாது என்று நினைத்தவர்களில் இவரும் ஒருவர்: விஷால்

நான் ஆர்.கே நகர் தேர்தலில் நிற்கமுடியாமல் போனதற்காக இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் மகிழ்ச்சி அடைந்ததாக விஷால் கூறினார்.

'நிமிர்' டைட்டிலை பிரியதர்ஷனிடம் பரிந்துரை செய்தவர் யார் தெரியுமா?

பொதுவாக ஒரு படம் எந்த வகையை சேரும் ,அப்படத்தில் என்ன எதிர்பார்க்கலாம் ஆகிய அம்சங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க அப்படத்தின் தலைப்பு உதவியாக இருக்கும்

சன்னிலியோன் படத்தின் முழு டைட்டில் அறிவிப்பு

பிரபல பாலிவுட் நடிகை சன்னிலியோன் நடிக்கவுள்ள சரித்திர கதையம்சம் கொண்ட படத்தின் பாதி டைட்டில் 'தேவி' என்று ஒருசில மணி நேரத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முழு டைட்டிலும் வெளியாகியுள்ளது.